REALIZING THE CENTURIES OF THE DREAM

Renovation & Restoration of two main Vimanams and surrounding Sannththies Carved in grantee stones

திருக்கேதீச்சர ஆலயமும்

மாந்தைத் துறைமுகமும்

சேர்.கந்தையா வைத்தியநாதன்

திருக்கேதீச்சரத்து இறைவன் புகழை நாயன்மார் இருவர் பாடிப் பரவினர். அவர்களுள் ஒருவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பத்தமூர்த்தி நாயனார், மற்றவர் ஒன்பதாம் நூற்றாண்டில் சைவம் வளர்த்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் கேதீச்சரத்து இறைவனைப் பாடிய அவர்கள் மாந்தையின் மாண்பையும் போற்றிப் புகழ்ந்தனர்.மாந்தைத் துறைமுகத்தில் தங்கி நின்ற பெரும் கப்பல்களையும் மாந்தைப் பட்டினத்தில் அமைந்து விளங்கிய பல அடுக்கு மாளிகைகளையும் மலர்ச் சோலைகளையும் பழத் தோட்டங்களையும் தம் தேவாரங்களில் தீட்டிக் கவின்பெறக்காட்டியுள்ளனர். பாலாவியின் முகத்துவாரத்தில் மாந்தைத் துறைமுகம் அமைந்து இருந்தது.அங்கே ‘மலை போன்ற அலைகள் எழுந்தும் விழுந்தும்’ காட்சியளித்தன.களஞ்சியக் கட்டிடங்களும், பாலத்துறையும் பாலாவியின் தென்கரையில் அமைந்து விளங்கின.அவ்விடம் இன்றும் ‘வங்காலை’ (வங்கம்,கப்பல்,காலை,கப்பல்கள் தங்கும் நிலையம்) என்ற பெயருடன் நிலவக் காணலாம்.பாலாவியின் வட கரையில் திருக்கேதீச்சர ஆலயம் அமைந்து திகழ்ந்தது.அதையடுத்து அதன் ஆட்சியாளரின் இல்லங்களும் மக்கள் வாழ்ந்த வளம் மிக்க மாளிகைகளும் காணப்பட்டன. மாளிகைத்திடல் (மாளிகைகள் நிலவிய உயர்ந்தவிடம்) பாப்பாமோட்டை (அந்தணர்க்குரிய இடங்கள்) கோயிற்குளம் (கோயில் நிலத்திற்கு நீர்ப்பாச்சும் குளம்) என்ற பெயர்களுடன் இன்றும் அவை இருப்பதை நாம் காணலாம்.

Latest News

Events

November 2018
M T W T F S S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930