தேவாரத் திருப்பதிகம்-திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்

திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த
திருக்கேதீச்சரத் தேவாரத்
திருப்பதிகம்

பண் – நட்டராகம்ஷ

திருச்சிற்றம்பலம்
விருது குன்றமா மேருவி னாணர வாவன லெரியம்பாற்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளுங்
கருது கின்றவூர் கனைகடற்; கடிகமழ் பொழி;லணி மாதோட்டங்
கருக நின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.

(இ-ள்) திரிபுரத்திலுள்ளோர்கள் தாங்கொண்ட வெற்றி கெடமகாமேரு வில்லாகவும், சே~ன் நாணாகவுங் கொண்டு சுடுகின்ற அக்கினியாகிய அம்பினாலே போர் செய்து அவற்றை அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாக எந்நாளும் நினைக்கப்படுகிற ஊராகிய முழங்குகின்ற கடல் சூழ்ந்த வாசனை கமழுஞ் சோலை செறிந்த மாதோட்டத்திலே எவரும் மதிக்கும்படி  உள்ள திருக்கேதீச்சரமென்னுந் தலத்தை வணங்க, அங்ஙனம் வணங்கினோரைத் தீவினைகள் சேரா எ-று.

பாடல் வீணையர் பலபல சரிதைய ரெருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈடமாவது விருங்கடற் கரையினி லெழிறிகழ் மாதோட்டங்
கேடி லாதகே தீச்சரந் நொழுக் கெடுமிடர் வினைதானே.

 (இ-ள்) பாடுகின்ற வீணையை உடையவரும், பலபல ஒழுக்கத்தை உடையவரும்,    தருமதேவதையாகிய இடபத்தைச் செலுத்திப் படைத்தல், காத்தல,; அழித்தல,; மறைத்தல் அருளல் என்கிற ஐந்தொழிலாகிய அரிய நடனத்தை விரும்புகின்றவரும், தேவர்கள் முறையிட நஞ்சையுண்டு இருண்ட கண்டத்தையுடையவருமாகிய சிவபெருமானுக்கு இடமாவது பெரிய கடற்கரையிற்பொருந்திய அழகு விளங்குகின்ற மாதோட்டத்திலுள்ள கேடில்லாத திருக்கேதீச்சரமென்னுந் தலமாம். அதனை வணங்கி எழ வருத்தத்தைச் செய்யுந் தீவினைகளெல்லாங் கெடும் எ-று.

தமக்கென ஓரொழுக்கமில்லாராயினும் ஆன்மாக்களுக்கருளுமாறு பற்பல ஒழுக்கங்களை மேற்கொண்டமையிற் பலபல சரிதையர் என்றும், பயன்றராவேனை நடனங்கள் போலாகாது ஆன்மாக்களை முத்தியிற் சேர்த்தலாகிய பெரும் பயன் தரும் நடனமாதலின் அருநட்டமென்றுங் கூறினார்.

பெண்ணோர் பாகத்தர் பிறைதவழ் சடையின ரறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவ ரகந்தொறு மிடுபிச்சைக்
குண்ண லாவதோ ரிச்சையி னுழல்பவ ருயர்தரு மாதோட்டத்
தண்ண னண்ணுகே தீச்சர மடைபவர்க் கருவினை யடையாவே

(இ-ள்) தமது திருவருளாகிய சக்தியை ஒரு பாகத்திலுடையவரும், சுத்த ஞானமாகிய இளம்பிறை தவழும் சடையுடையவரும், நான்கு வேதங்களாகிய வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்க விபூதியை  விரும்பி அணிபவரும், பற்பல கீதங்களைப் பாடுகின்றவரும், நிரீச்சுர வாதிகளாகிய முனிவர்களுக்கு ஈசன் ஒருவர் உண்டென்னும் உண்மையைப் புலப்படுத்தும் அருள் காரணமாக அவர்கள் வீடுகள் தோறும் இடுகின்ற பிச்சையை உண்ணவேண்டு மென்னும் விருப்பமுடையவர் போலச் சென்றவரும் ஆகிய சிவபெருமான் வீற்றிருக்கின்ற உயர்ந்த மாதோட்டதிலுள்ள திருக்கேதீச்சர மென்னுந் தலத்தை அடைபவர்களைத் தீவினையடையா எ-று.

பொடிகொண் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும்
வடிகொண் மூவிலை வேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேன் மொய்த்ழும் வினைபோமே.

(இ-ள்) விபூதியை அணிந்த திருமேனியை உடையவரும், புலித்தோலை உடுத்த அரையை உடையவரும், விரிந்தகையி லேந்துகின்ற கூரிய இச்சை, ஞானம், கிரிகை என்னும் முத்தலைச் சூலத்தை யுடையவரும், உபவீதத்தை உடையவருமாகிய சிவபெருமான் விரும்பி வற்றிpருந்த திரைபொருகின்ற கடல் சூழ்ந்த மாதேட்டத்திலுள்ள திருக்கேதீச்சரத்திலே அன்புகென்ட மனத்தை யுடையராகித் தலைகளைச் சாய்த்து அப் பெருமானுடைய பாதங்களை வணங்கவல்ல தொண்டர் மேலே திரண்டெழுகின்ற தீவினைகள் கெடும் எ-று.

நல்ல ராற்றவு ஞானநன் குடையர்தம் மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடன் மாதோட்டத்
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சர மிராப்பக னினைந்தேத்தி
அல்ல லாசறுத் தரனடி யிணைதொழு மன்பரா மடியாரே.

(இ-ள்) மிகவும் நன்மையை உடையவரும், ஞானத்தை மிகவுடையவரும், தமi;மடைந்த அன்பர்களுக்கு அருளைச் செய்ய வல்லவரும், உலகத்திலுள்ள பெரிய பிறப்பிறப் பில்லாதவரும் ஆகிய அளவிறந்த புகழயுடைய சிவபெருமானது வளங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சர மென்னுந் தலத்தை இரவும் பகளும் சிந்தித்துத் துதித்துத துக்கத்தை முழுதுங் கெத்து அப் பெருமானது இருபாதங்களையும் வணங்கும் அன்பர்கள் சிவனடியர் என்று சொல்லப்படுவர் எ-று.

ஏனையர் அன்பராகாரென்பதாம்.

பேழை வார்சடைப் பெருந்திரு மகடனைப் பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கையற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்;பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதேட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீண் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.

(இ-ள்) பரந்து உயர்ந்த பெட்டிபோன்ற சடாமுடியிலே பெரிய கங்கையைப் பொருந்தும்படி வைத்து, ஒரு பாகத்தை, அருட்சக்திக்கு கொடுத்த கொள்கையை  யுடையவரும், வி~;ணுவாகி பன்றியினது எயிற்றை அணிந்த மார்புடையவருமாகிய தமது சிவபெருமான் இருப்பிடமாகிய வாழைச் சோலைகளிலே மந்திகள் மகிழ்ச்சி பெருக இருக்கின்ற மாதேட்டத்திலுள்ள திருக்கேதீச்சர மென்னுந் தலத்தை ஒரு காலத்தும் பிரியார் எ-று.

பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்
வண்டு பண்செய மாமலர் பொழன்மஞ்ஞை நடமிடு மாதோட்டந்
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய் கேதீச்சர மதுதானே.

(இ-ல்) முற்காலத்திலே சனகாதி நால்வருக்குந் தருமங்களை உபதேசித்தருளி, பலவுலகங்களிலுமுள்ள ஆன்மாக்கள் அத்தருமங்களை மேற்கொண்டொழும்படி செய்த சிவபெருமான் உலகத்திலுள்ளார் வணங்க விரும்பி வீற்றிருக்குங் கோயில், வண்டுகள் கீதங்களைப் பாடப் பூஞ்சோலைகளில் மயில்கள் கூத்தாடுகின்ற மாதோட்டத்திலுள்ள அடியர்கள் நர்டோறும் தோத்திரஞ் செய்ய அப்பெருமான் அவர்;களுக்குத் திருவருள் செய்கின்ற திருக்கேதீச்சர மென்னுந்தலமாம். எ-று.

தென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்டோள்
தன்னலங்கொட வடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு மடியவ ரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாரே.

(இ-ள்) கைலாசமென்னும் மலையை வருத்தி எடுத்த தெற்கின் கணுள்ள இலங்கையிலுள்ளார்க் கரசனாகிய இராவணணுடைய தலைகளும் வலிய புயங்களும் தத்தம் நிலைகெட நெரித்துப் பின் அவன் வேண்டுதல் செய்ய அருள்புரிந்த முதல்வர், கடலின்கணுள்ள, பொன்னும், பிராகசிக்கின்ற முத்துக்களும், மாணிக்கங்களும் செறிந்த மாதோட்டத்திலுள்ள, சிந்;தித்து அன்போடு மடியார்கள் வணங்குகின்ற திருக்கேதீச்சரம் மென்னும். தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே எ-று.

பூவுளானுமப் பொருங்கடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநுன் னடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியு நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தவெம் பெருமானே.

 (இ-ள்) மாமரங்களும், கமுகுகளும,; வாழைகளும் நெருங்கிய மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள திருக்கேதீச்சரமென்னும்ந் தலத்திலே நிலையாக கௌரியம்பிகை என்னும் அருட் சக்தியோடு வீற்றிருக்கினற நமது கடவுளே! பிரமாவும,; வி~;ணுவும் முறையே அன்னமும், பன்றியுமாய் மேலே பறந்தும் பூமியைக் கிழித்தும் தேடித் தேவரீருடைய முடியையும், அடியையும் காண்கின்றிலர். அவர்களுடைய கடவுட்டன்மை எவ்வாறாகும்? எ-று.

புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய வேழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சர மடைமின்னே.

(இ-ள்) உலகத்தீரே, புத்தசமயிகளாகிய சில தைத்தவஸ்தி ரங்களை அணிபவரும், புறங்கூறிப் பலரை வஞ்சித்து நின்ற புசிக்கும் சமணர்களாகிய மூடர்களும் போதிக்கின்ற அறியாமையாகிய போதனையைக் கேளாதொழியுங்கள். மதயானையை அஞ்சும்படி யுரித்து, அதன்றோலைப் போர்த்த சகத் பிதாவாகிய சிவபெருமான் வீற்றிருக்கின்ற   மாதோட்டத்திலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக்கரையிலிருக்கின்ற  திருக்கேதீச்சரமென்னுந் தலத்தையடையுங்கள். எ-று.

மாடெலாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்
தாடலேறுடை யண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொ னவின்றெழு பாமாலைப்
பாடலாயின பாடுமின் பக்தர்கள் பரகதி பெறலாமே.

 (இ-ள்) பக்கங்களிலெல்லாம் மணமுரசைப் போலக் கடலோசை பிறவோசைகளை அடக்கும் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சரம் என்னுந் தலத்தில்  வீற்றிருக்கின்ற   இடபாரூடராகிய சிவபெருமானைச் சீர்காழித் தலைவனாகிய திருஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தையே அன்பர்களே! நீங்களும் பாடுங்கள், மோ~த்தைப் பெற்றுக்கொள்ளலாம். எ-று.

நவின்று என்னும் வினையெச்சங் காரணப்பொருட்டு. மாதோட்டத்திலுள்ளார் விரகநோயுடையரன்றி என்றுஞ் சிவத்தியானஞ் செய்யுங் சற்சனராதலின் மண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டம் என்றும், வீரசக்தியாகிய விட்டுணுவே இடபமாதலின் ஆடலேறென்றுங் கூறினார்.