தேவாரத் திருப்பதிகம்-சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த
திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகம்

பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

நத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானையுரி போத்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.

 (இ-ள்) பாஞ்சசன்னியமென்னும் சங்கையேந்திய ஞானியாகிய வி~;ணுவென்னும் இடபத்திலேறினவரும், மதத்தால் நனைகின்ற கதும்பும் பொருந்திய வாயையுடைய யானைத் தோலை உரித்துப் போர்த்த நித்திய கல்யாணரும், இறந்த வி~;ணு முதலியோர்களுடைய என்பு மாலைகளை அணிபவரும் யாவரென்றால், அன்பையுடைய அடியார் வணங்குகின்ற பாலாவியென்னுந் தீர்த்தக்கரையிலுள்ள திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.

ஐம்படைகளுட் சங்கமும் ஒன்றாதலின், நத்தார் படையென்றும், தமோகுண வயத்தவராய் என்றுந் துயில் புரிவோர் போலாகாது என்றுஞ் சிவயோக துயில்புரியு மகா ஞானியாதலிற் பசுவாய்த் தாங்கும் பேறடைந்த பெரியர் என்பார், நத்தார்படை ஞானன்பசு என்றுங் கூறினார். பத்தாகிய தொண்டர் என்பதற்குச் சிவபுண்ணியம் பத்தையும் உடைய தொண்டர் என்றாலும் ஒன்று. பசு ஏறுதலும் யானையுரி போர்த்தலும் எலும்பணிதலும் தாமே முழுமுதற் கடவுள் என்பதற்கேதுவாய் நின்றன. மணவாளன் என்பதும் உடம்பொடு புணர்தலால் அவ்வாறயிற்று. மத்தம் – களிப்பு.

சுடுவார்பொடி நீறுந்நல்ல துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானையுரி யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
திடமாவுறை கின்றான்றிருக் கேதீச்சரத்தானே.

(இ-ள்) விபூதியையும், இளம் பிறையையும,; யானைத் தோலையும் அணிந்த நீலகண்டரும், உமாதேவியாரோடு பிரியாதிருப்பவரும் யாரென்றால், பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலுள்ள திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.

சுடுவார் என்பது சுடுதலார்ந்த என விரியும். ஏர் – உவம உருபு.

அங்கம்மொழி யன்னாரவ ரமரர் தொழுதேத்த
வங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைN;மற்
செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத்தனே.

 (இ-ள்) இளம் பிறையைச் சூடினவரும,; சிவந்த கண்களையுடைய சர்ப்பக்கச்சையை அணிந்தவரும் யாரென்றால் வேத வேதாங்கங்களையறிந்த பிராமணர்களும,; தேவர்களும் வணங்கித் துதிக்க தோணிகள் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற  திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.

அங்கத்தை ஒழித்த அத்தன்மையனாய மன்மதனுந,; தேவரும் வணங்க எனப் பொருள் கொண்டு மன்மதன் முற்காலத்தில் திருக்கேதீச்சரத்திற் பூசித்தான் என்பாரும் உளர்.

கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயு மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக் கேதீச்சரத் தானே.

(இ-ள்) நீலகண்டரும், நெற்றிக் கண்ணரும், அறிஞராலறியப்படும் வேதத்தில் வல்லவரும் யாரென்றால், வண்டுகள் கீதங்களைப் பாடுகின்ற மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பெரிய திரையை வீசிப் பெருகும் பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற  திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.

கரியகரை என்பது கருங்கண்ணன் என்பதுபோல நின்றது.

அங்கத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.

(இ-ள்) அடியார்களுக்குச் சரீரத்திலுள்ள நோய்களை நீக்கியருளுகின்றவர் யாவரென்றால், தமது இடப் பாகத்திலுள்ள கௌரியம்பிகையென்னும் அருட்சக்தியோடு தோணிகள் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்ட மென்னும் நல்ல ஊரிலுள்;ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற தென்னஞ்சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரமென்னும் ஸ்தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.

பங்கஞ் செய்த என்பதற்கு ஒரு பாகத்தை வேறுபடுத்திய என்றும் அமையும்.

வெய்யவினை யாயவடி யார்மேலொழித் தருளி
வையமலி கின்றகடன் மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.

(இ-ள்) அடியார் மீது வருந் தீவினைகளை நீக்கியருளுகின்றவர் யாவரென்றால் பூமியை விருத்தி செய்கின்ற கடல் சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற  திருக்கேதீச்சரமென்னுந் ஸ்தலத்தில் கௌரியம்பிகையோடு  வீற்றிருக்கின்ற சிவந்த சடாமுடியையுடைய சிவபெருமானே. எ-று.

ஊனத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடன் மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்தெறி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.

(இ-ள்) அடியார் மீது வருகின்ற குற்றம் மிகுந்த நோய்களை  நீக்கியருளுகின்றவர் யாவரென்றால், வெண்மையாகிய சங்குகள் மிகுந்து நிறையுங் கடல் சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கும்  திருக்கேதீச்சரமென்னுந் தலத்திலே பாலுஞ் சுவை மிகுதியை யாவுஞ் சொற்களையுடைய கௌரியம்பிகையோடு  வீற்றிருக்கின்ற பன்றியினெயிற்றையணிந்த சிவபெருமானே. எ-று.

‘ஒழித்தருளி’ கள் ஒடுங்கி என்பதுபோற் பெயராய் நின்றன.
பாலுஞ் சுவைகுன்றுதற் கேதுவாய மொழி யென்றும் அமையும்.

அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழின் மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல்
சிட்டன்னமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.

(இ-ள்) அட்டமூர்த்தியாயுள்ளவரும், மேலானவரும் அழகாகத் திருவரையில் சுத்தமாயை ஆகிய சர்ப்பக் கச்சையணிந்து நம்மையடிமை கொள்பவரும் யாவரென்றால், தேனையுண்டு வண்டுகள் சுழலுகின்ற சோலை சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கும்  திருக்கேதீச்சரமென்னுந் தலத்திலே கௌரியம்பிகையென்னும் அருட்சக்தியோடு வீற்றிருக்கின்ற  சிவபெருமானே. எ-று.

மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்
தேவனெனை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.

(இ-ள்) பிரமா, வி~;ணு, உருத்திரர் எனவும் சத்திசிவமெனவும் பேசப்படுகின்ற மூன்று கண்களையுடைய தலைவராகிய கடவுளும், என்னை அடிமையாக்கி கொள்பவரும் யாவரென்றால், மாமரங்களில் கனிகள் தூங்குகின்ற சோலை சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள இருவினைகளையுங் கெடுக்கின்ற அடியார் வசிக்கும் பாலாவித் தீர்த்தக்கரையிலிருக்கின்ற திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.

பாவந்தீவினையையும,; வினை நல்வினையும் உணர்த்தின. தற்பயன் கருதாது பசுக்களுக்குப் பரிபக்குவ நிகழச் செய்து பரமுக்தி சேர்க்குமாறு மூவராயும் இருவராயும் இருந்தாரன்றி அவர்க்கவை இயற்கைன்றென்பார் மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி என்றார்.

கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானே
மறையார்புக ழூரன்னடித் தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.

(இ-ள்) கரியனடலைச் சூழ்ந்த கழிக்கரை பொருந்திய மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பக்கங்களிற் பொருந்திய சோலைகளில் வண்டுகள் கீதங்களைப் பாடும் திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற  சிவபெருமானைப் பிராமணர்கள் புகழுகின்ற நம்பியாரூரனாகிய திருவடித் தொண்டன் பாடிய குறைவற்ற திருப்பதிகத்தைப் பாராயணஞ் செய்ய அவரைத் தீவினைகள் அடையா. எ-று.

சிறையார் என்னும் அடையை, வண்டிற் கேற்றினுமமையும்.

திருச்சிற்றம்பலம்