தேவார காலங் கண்ட மாதோட்ட நன்னகர்-சேர். கந்தையா வைத்தியநாதன்

தேவார காலங் கண்ட
மாதோட்ட நன்னகர்

சேர். கந்தையா வைத்தியநாதன்

திருக்கேதீச்சரத்து இறைவன் புகழைப் பாடிப் பரவியோர் இருவர். ஒருவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தமூர்த்p நாயனார் இன்னொருவர் ஒன்பதாம் நூற்றாண்டில் சைவம் வளர்த்த சுந்தரமூர்த்தி சுவாமிகள். கேதீச்சரத்து இறைவனைப் பாடிய அவர்கள், மாதோட்டத்தின் மாண்பையும், பாலாவியின் பண்பையும் போற்றிப் புகழ்ந்தார். அன்று மாதோட்டம் பல வளங்களும் பெற்று மிளிர்ந்தது. பாலாவி பெரிய திரைகளை வீசிப் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. எனவே மாதோட்ட நன்னகர் சீரும் சிறப்பும் உடையதாய் திகழ்ந்தது என்பதைச் சம்பந்தரும், சுந்தரரும் அருளிச் செய்த பாடல்கள் இனிது புலப்படுத்துகின்றன.

ஓங்கி வளர்ந்க பொழில்கள் அன்று மாதோட்டத்தின் அழகுக்கு அழகு செய்தன. அங்கே மாமரங்களும், கமுகமரங்களும், வாழைமரங்களும் நெருங்கி வளர்ந்து காட்சி கொடுத்தன. மாமரங்கள் பழுத்துத் தொங்கிய பழங்களையும், கதலியிற் கனிந்திருந்த கனிகளையும் பொழில்களில் வதியும் மந்திகன் உண்டு களித்தன. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சின. சோலைகளிலுள்ள மலர்களில் பெடையொடு வண்டுகள் வதிந்தன. பாலாவியில் வாழ்ந்த வாளை, வானை நோக்கித் துள்ளியபோது வளர்ந்தோங்கிய கமுகின் பாளையில் வதிந்த வண்டுகள் முரன்று எழுந்து ஓடின. இவ்வறு நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே பெற்று மாதோட்டநன்னகர் அன்று விளங்கிற்று என்பதை,

“கனைகடல் கடிகமழ் பொழில் அணி மாதோட்டம்”

என்றும்,

          “மாவும் பூகமும், கதலியும் nருங்கு மாதேட்ட நன்னகர்”

என்றும்,

                             “வாழை அம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்”

என்றும்,

திருஞானசம்பந்த மூர்த்த்சுவாமிகள் தாம் அருளிச் செய்த தேவாரங்களில் அழகாய் படம் பிடித்துக் காட்டுகிறார். தேவாரங்களைப் பாடுகின்றபோதே, நம் அகக்கண்முன்னே அழகிய பொழிலையும், அங்கே கனியுண்டு களிக்கும் மந்திகளையும் காண்கின்றோமல்லவா? மாதோட்ட நன்னகரில் மாவின் கனிதூங்கும் மாண்பினை,”மாவின் கனிதூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்” என்று தேவாரத்தில் சொற்களால் தீட்டுகின்றார்.

மாதோட்டப் பூஞ்சோலையில் புது மலர்களில் வண்டுகள் பல வந்திருந்தன. அவை இனிய தேனை விரும்பி உண்டு மதி மயங்கி ரீங்காரம் செய்து பண்கள் பாடித்திரிந்தன. அவ்வினிய இசையாழின் இன்னிசையைப் போன்று சுந்தரர் செவிகளிலே ஒலித்து. இதனை இவர் அருளிச் செய்த தேவாரங்களில் வரும் அடிகள் சில இனிது புலப்படுத்துகின்றன.

                “சிறையார் பொழில் வண்டு யாழ் செய்யும் கேதீச்சரத்தானை”

என்றும்,

“மட்டுணடு வண்டாலும் பொழில் மாதோட்ட நன்னகர்”

என்றும்,

“வரிய சிறை வண்டு யாழ் செயும் மாதோட்ட நன்னகர்”

என்றும்,

வண்டாலும் பொழிலை நம் கண்முன்னே காட்டுகின்றார் சுந்தரர்.

மாதோட்ட நகரின்கண் உள்ள சோலை ஒன்றிலே அழகான காட்சி ஒன்றினை ஞானக்கண்ணால் கண்டு வியக்கினார் சம்பந்தர். மாமலர்பொழிலிடையே மயில் ஒன்றைக் கண்டார். அந்த மயில் அழகாக ஆடுவதையும் பார்த்தார். அந்த நடனமும் வண்டுகளின் இன்னிசைக்கு இயைய அமைந்து இருந்தது இருந்ததையும் நோக்கினார். அக்காட்சி அவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. இக் கவின் மிகும் காட்சியைத் தம் தேவாரத்திலே,

“வண்டு பண்செய மாமலாப் பொழிலிடை மஞ்ஞை நடமிடும்” என்று அழகாகப் படம் காட்டுகின்றார். இவ்வடி, “பண்டு நால்வருக்கு அறமுரைத்தருளி” என்னும் தேவாரத்தின் மூன்றாவது அடியாக அமைந்து திகழ்கின்றது.

மாதோட்ட நன்னகரில் தென்னைகள் நிரைநிரையாகச் செழித்து வளர்ந்து காட்சி கொடுத்தன. திருக்கேதீச்சரத்தைச் சூழ்ந்து தென்னஞ் சோலைகள் திகழ்ந்தன என்பதை,

    “தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே”

என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச் செய்த தேவாரத்தில் ஓரடியால் இனிது தெளிவுறுத்துகின்றார். ஏன்? இன்றும் தென்னைகள அங்கு செழித்து வளர்கின்றனவே! கடறகரையை அடுத்துள்ள நிலமாதலாலும் தென்னை வளர்வதற்கு மாதோட்டத்தின தென் பாகம் இன்னும் உகந்த இடமாக இருப்பதாலும் அன்று பல சோலைகள் நிறைந்து திகழ்ந்திருக்கலாம் என்பது தெற்றெனத் தெரிகின்றது!

மேலும், மாதோட்ட நன்னகர் அன்று திருவுறை பொன்னகராகத் திகழ்ந்தது கடலீன்ற முத்துக்களும், வலம்புரிச்சங்குகளும் விலையுயர்ந்த மணிகளும் அங்கு குவிந்து கிடந்தன. மாதோட்ட நகரின் செல்வப் பெருக்கினைத் திருஞானசம்பந்த சுவாமிகள்,

                                    “பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய மாதோட்டம்”

எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். இன்னும் மாதோட்டத்தின் அயலிலுள்ள முழங்குதிரைப் பெருங்கடலின் வெண் சங்குகள் மலிந்து கிடந்தன என்பதை,

 “வானத்துறு மலியுங்கடல் மாதோட்ட நன்னகர்”

என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கூற்று மேலும் வலியுறுத்துகிறது.

மாதோட்ட நன்னகர் அன்று சிறந்த துறைமுகமாகவும் விளங்கிற்று. அங்கே சங்குகளும் முத்துக்களும் மணிகளும் மட்டுமின்றி இன்னும் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியான பண்டங்களும் குவிந்து கிடந்தன. வாணிபத்தில் சிறப்புற்று விளங்கிய மாதோட்ட நன்னகரில் வாழ்ந்த மக்கள் எவ்வித குறையுமின்றிப் பல செல்வங்களும் பெற்று இன்புற்றருந்தனர். அவர்களின் இன்ப வாழ்வுக்கு எறிதிரைக் கடலும் உறுதுணையாய் அமைந்து விளங்கிற்று. இதனாலே,

                                                                                                                               “வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்”

எனத் தேவாரங்கள் அந்நகரினைப் புகழ்ந்து பேசுகின்றன. மேலும், பல பண்டங்களை ஏற்றிய நாவாய்கள் அத்துறைமுகத்துக்கு வருவதும் போவதுமாக இருக்கும். ஒன்றல்ல, பல நாவாய்கள் மாதோட்டத்துறைமுகத்தில் மலிந்து காணப்பட்டதை

                                                                                                                                “வங்கம் மலிகின்ற கடல் மாதோட்;ட நன்னகரில்”

என்னும் அடி தெளிவாக எடுத்துக் காட்டுகின்ற தன்றோ! எனவே மாதோhட்டம் அன்று மிகவும் பெரியதொரு துறைமுகமாக விளங்கிற்று என்பதும் அதனையடுத்த கடல் கப்பற் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது என்பதும் தெளிவாகின்றது.

இவ்வாறு மாதோட்டம் எழில் பெற்றுத் திகழ்வதற்கு அதன் நடுவண் பாய்ந்தோடிய பாலாவி என்னும் நதியும் ஒரு காரணமாகும். இன்று அப்பெரு நதி வற்றி வரண்டு காட்சியளிக்கிறது. மழை பெய்யும் காலத்தில் மாத்திரம் அந்நதியில் ஓரளவு நீர் ஓடிச் செல்வதைக் காணலாம். மாதோட்ட மக்களுக்குப் பல வழிகளில் பாலாவி பயன்பட்டது. பாலாவியில் பாய்ந்து சென்ற புது நீரினை மறித்து இடையிடையே தேக்கிப் பல மைல்களுக்குப் பரந்து கிடந்த செந்நெல் வயல்களுக்கு மாதோட்ட மக்கள் நீர்ப் பாய்ச்சினர். பாலாவித் தண்ணீரால் பசுமை பெற்று விளங்கிய வயல் நிலங்கள் மாதோட்ட நகரை அழகு செய்தன. அங்கே தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்க தாங்க, வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருந்தது.அன்று பாலாவி மிக்க ஆழமுடையதாய்ப் பரந்து நீண்ட ஆற்றுப் படுக்கையினைக் கொண்டதாய் விளங்கிற்று. கடலிடைக் கலந்த பாலாவியின பெருக்கினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

                                                                                                                                “பரியதிரை எறியவரு பாலாவியின் கரைமேல்”

என்று தமது தோவாரத்தில் தீட்டுகிறார். இத்திருநதி தன்னில் படிந்த எவ்வருணத்தாரதும், எத்திறத்தாரதும் பாவப் பிணிகளைக் களைந்து அவர்களுக்கு முத்தியின்பத்தை நல்கிற்று என்று “த~ண கைலாய மான்மியம்” என்னும் நுல் கூறும்.

                      “பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்”

என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் கூற்று இதனை மேலும் வலியுறுத்துகின்றது.

                                                                                                                                 “மத்தம் மத யானையுரி போத்த மணவாளன்

     ………………………………………………………..

      …………………………………………………………

     ………………………. திருக்கேதீச்சரத்தனே”

எனப் போற்றிப் பாடுகின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அங்ஙனம் அவன் நித்திய மணவாளனாகில் அங்கு நாள்தோறும் மணமுரசு ஒலிக்க வேண்டுமே? ஆம் மணமுரசு சுந்தரர் செவிகளில் ஒலித்தது. மாதோட்ட நகரின் அயலிலுள்ள மறி கடல் நாள் தோறும் மங்கல ஒலி செய்து கொண்டே இருக்கும். இதனை,

          “மாடெலாம் மணமுரசெனக் கடலின தொலிகவர் மாதெட்டம்”

என்னு சுந்கரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப் பதிதம் ஒன்றிலே வரும் இவ்வடி திருக்கேதீச்சரத்து மணவாளனின் மங்கல முரசு எது என்பதை எமக்குத் தெரிவியா நிற்கின்றது. அக்கடலானது இன்று ஆழம் குறைந்ததாய் இருந்த போதிலும் பண்டு பாய்க் கப்பல் பலவோடிய மறி கடலாகத் திகழ்ந்தது. அக்கடலில் சங்குகள் மலிந்து கிடந்தன. அதன் அயலில் மாதேட்டம புகழ்; பெற்று சிறந்த துறைமுகமாக இயங்கிறு. அக்;கடல் கனைகடல் எனவும்;, மறிகடல் எனவும், மலிகடல் எனவும், வங்கம் மலிகின்ற கடல் எனவும், வானத்துறு மலியும் கடல் எனவும்; கறையார் கடல் எனவும், தேவாரத் திருப்பதிகங்களில் புகழ்ந்து பேசப்படுகின்றது.

எனவே திருக்கேதீச்சரத்து இறைவனது இன்னருளைப் பாடிய நாயன்மார்கள் மாதே;hட்டத்தின் சீரையும் சிறப்ihயும், பாலாவியின் பாங்கையும் அழகாகத் தேவாரங்களில் எடுத்துரைத்துப் போந்தார்கள். பண்டு எழில் மிக்குத்திகழ்ந்க இப்புனிதநகர் இடைக் காலத்தில் சிதைவுற்றுக் காடடர்ந்து கிடந்ததை எண்ணுந்தோறும் சைவப் பெருமக்களின் உள்ளங்கள் நைந்து வருந்துமன்றோ!